பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு.! மனைவிக்கு லீக்கான விஷயம்.! வில்லத்தனத்தை மிஞ்சிய கணவன்.! பகீர் சம்பவம்.!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரவீன் என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்ற பெண்ணுடன் திருமணமாகி உள்ளது. இவர்கள் இருவரும் கடந்த வாரம் உறவினர் வீட்டில் நடைப்பெற்ற திருவிழாவில் பங்கேற்க ஒசூருக்கு என்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரவீன் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து மனைவிக்கு உடம்பு சரியில்லை என உறவினர்களிடம் கூறிவிட்டு மனைவியை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சாந்தா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறி அவர்கத்து பெற்றோரிடம் உடலை கொடுத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார் பிரவீன். சாந்தாவிற்கு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பிரவீனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரவீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது வசாந்தாவிற்கு தெரிந்ததால், மனைவியை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.