கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்; தம்பதி எடுத்த விபரீத முடிவால் சோகம்.!



in Karnataka Couple Dies Suicide Loss Online Gambling 

 

ரூ.80 இலட்சம் அளவில் தம்பதி கடன் வாங்கி ஆன்லைன் கேம்ப்ளிங்கில் முதலீடு செய்து பணம் இழந்த விரக்தியில் தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜுபி அந்தோணி. இவரின் மனைவி ஷர்மிளா. தம்பதிகள் இருவரும் ஜோபியின் சகோதரர் ஜோஷி வீட்டில் சில நாட்களாக தங்கி இருந்தனர்.  

இதையும் படிங்க: தந்தையின் சடலத்துடன் மகன் பயணம்.. சட்டென கூறிய வார்த்தை.. எழுந்த தந்தை.!

இருவரும் ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், மொத்தமாக ரூ.80 இலட்சம் வரை கடன் வாங்கி இருக்கின்றனர். கடன் வாங்கிய இருவரும் அதனை முதலீடு செய்து இழந்துள்ளனர். 

தற்கொலை செய்துகொண்டனர்

இதனால் தம்பதிக்கு கடன் கொடுத்தவர்கள், ஜோபியின் சகோதரரை தெரிந்துகொண்டு, அவருக்கு தொடர்பு கொண்டு மிரட்டத் தொடங்கியுள்ளனர். இதில் வேதனையடைந்த ஜோஷி, நேற்று தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்தார். 

karnataka

இந்த தகவலை அறிந்த ஜுபி - சர்மிளா தம்பதியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையை முன்னெடுத்தனர். 

மரணத்திற்கு முன்னதாக ஜோஷி பதிவு செய்த வீடியோவில், சகோதரர் மற்றும் அவரின் மனைவியை சூதாட்டத்தில் பணம் இழந்தது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் தொடர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். 
 

இதையும் படிங்க: சாக்லேட் கொடுப்பதாக 13 வயது சிறுமியிடம் அத்துமீறல்; வீட்டை தாழிட்டு அதிர்ச்சி., அலறலில் அதிர்ந்துபோன அக்கம்-பக்கம்.!