16 ஆண்டுகளாக முடியை சாப்பிட்ட 21 வயது இளம்பெண்; அறுவை சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்த பெண்.! 



in-uttar-pradesh-bareilly-21-year-old-girl-eat-hair-pas

 

தனது 5 வயதில் இருந்து உரோமத்தை சாப்பிட்டு வந்த சிறுமி 21 வயதில் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டார்.

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரெய்லி மாவட்டம், கார்கைனா பகுதியில் 21 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே தீர்த்த வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக நாட்டு வைத்தியத்தில் பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனில்லை. 

இதையும் படிங்க: என் கூட படுக்கைக்கு வாங்க டீச்சர்.. டியூசன் போன இடத்தில் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. கூண்டோடு கைது.!

இதனையடுத்து, இளம்பெண்ணின் பெற்றோர் மகளை பிரெய்லி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது, பெண்ணின் வயிற்றில் அதிக அளவு மனித உரோமங்கள் இருந்துள்ளது.

அறுவை சிகிச்சை நிறைவு

இதனைக்கண்டு அதிர்ந்துபோன மருத்துவர்கள், உடனடியாக பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் உடலில் இருக்கும் முடியை வெளியேற்ற முடிவெடுத்தனர். மருத்துவர்களின் திட்டப்படி கடந்த செப்.22 அன்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

2 கிலோ முடி அகற்றம்

அடிப்படை சிகிச்சைக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையை தொடர்ந்து, மொத்தமாக 2 கிலோ அளவிலான முடி பெண்ணின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது. விசாரணையில், பெண்மணி ரகசியமாக முடியை சாப்பிடும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார். 

கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனது முடியையே யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு வந்த நிலையில், முடி செரிக்காமல் இறுதியில் அவருக்கு உடல்நலக்குறைவை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது. 

இதையும் படிங்க: சாலையோரம் உட்கார்ந்து இருந்ததால் சோகம்; நண்பர்கள் மீது பாய்ந்த கார்.. ஒருவர் பலி., 2 உயிர் ஊசல்.!