மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டா கத்தி பைரவன்: பந்தாவாக பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்..! பதுங்கிய அடாவடி ஆசிரியர்கள்..!
அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தொடக்கப்பள்ளியில் வேலை பார்க்கும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திரிதிமேதா தாஸ்(38) என்ற ஆசிரியர். 11 வருடங்களாக அந்த பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அவர் கோபத்தில் கத்தியுடன் பள்ளிக்கு வந்ததைப் பார்த்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவலர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை பிடித்து விசாரித்தனர்.
பள்ளியில் வேலை செய்யும் மற்ற ஆசிரியர்களின் முறைகேடுகளால் விரக்தியில் கோபம் அடைந்ததாகவும், கத்தியைக் காட்டி அவர்களை எச்சரிக்கை செய்ய நினைத்ததாகவும்த தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். பட்டா கத்தியுடன் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் நுழைந்த போது மற்ற ஆசிரியர்கள் ஓடி பதுங்கியதாக கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் அவர் மீது யாரும் புகார் செய்யாததால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை.