வருமானவரித்துறைக்கு வந்த திடீர் தகவல்.! சிக்கிய ரூ. 400 கோடி கருப்பு பணம்.!



income-tax-caught-black-money

ஐதராபாத்தில் பிரபல மருந்து குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் கணக்கில் காட்டாத வருவாய் வைத்திருப்பதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து வருமானவரித்துறை விரைந்து சென்று 5 மாநிலங்களில் சுமார் 20 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு வருமானவரித்துறை நடத்திய சோதனையில், அந்த மருந்து குழுமம் கணக்கில் காட்டாமல் ரூ.400 கோடி வருவாய் ஈட்டியதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. 

Black money

வருமானவரித்துறை சோதனை நடத்திய பிறகு நடத்திய விசாரணையில் ரூ.350 கோடி வருவாய் கணக்கில் காட்டாதவை என மருந்து குழுமம் ஒப்புக்கொண்டது. மேலும், ரூ.1 கோடியே 66 லட்சம் பணமும் கைப்பற்றப்பட்டது. மேலும் அரசு மதிப்பை விட குறைவான விலைக்கு நிலங்கள் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.