எதிர்ப்புகளை மீறி நடைமுறைக்கு வந்தது 'அக்னிபத்' திட்டம் : விமானப்படையில் சேருவதற்கான விவரங்கள் வெளியீடு..!
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவ பணிக்கு ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
இந்திய ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 4 ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆட்கள் சேர்ப்பதற்கான விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிய தகுதி, கல்வித் தகுதி, மருத்துவத் தரநிலைகள், மதிப்பீடு, விடுப்பு, ஊதியம், ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்றவற்றை விமானப்படை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Indian Air Force releases details on 'Agnipath' recruitment scheme
— ANI (@ANI) June 19, 2022
1/2 pic.twitter.com/YKFtJZ2OzP
இந்தத் திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், ஜூன் 24 ஆம் தேதி முதல் இந்த அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு சேவையாற்ற இளைஞர்களை சேர்ப்பதற்க்கான அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.