#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்.! மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு கிளம்பும் கடும் எதிர்ப்பு.!
ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஜம்மூ காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் மூலம், இந்தியக் குடியுரிமை உடையவர்கள் லடாக், ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடியும், ஆனால் விவசாய நிலங்களை மட்டும் வாங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Great news. Any Indian citizen can now buy land in Jammu & Kashmir & Ladakh. Ministry of Home Affairs notifies UT of Jammu and Kashmir Reorganisation (Adaptation of Central Laws) Third Order, 2020. The order will come into force with immediate effect. Full integration of J&K. pic.twitter.com/PKn0oLOZCT
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) October 27, 2020
கடந்த ஆண்டு சட்டப்பிரிவுகள் 370, 35-ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதற்கு முன் ஜம்மூ காஷ்மீரில் அசையா சொத்துகளை வெளியாட்கள் வாங்க முடியாது. இந்நிலையில், புதிய சட்டத்திருத்தங்கள் மூலம் காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
ஆனால் விவசாய நிலங்களை விவசாயம் சாராதவர்களுக்கு விற்பனை செய்ய சட்டத்திருத்தங்கள் அனுமதியளிக்கவில்லை என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.