புதிய ரயிலில் கடவுள் சிவனுக்கு படுக்கை வசதியா? ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம்!



IRCTC Explained about new train

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நிகழ்ச்சி ஒன்றில் காசி மகாகால் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடியால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. வாரணாசி - இந்தூர் இடையே இயக்கப்படும் அந்த ரயில் வரும் வியாழக்கிழமையில் இருந்து இயக்கப்படவுள்ளது.

அந்த ரயிலில் ஏசி வசதியான மூன்றாம் வகுப்பு பெட்டியில் உள்ள ஒரு படுக்கையில் சிவனின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயிலில் ஒரு படுக்கை வசதியானது கடவுள் சிவனுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என சர்ச்சை கிளம்பியது.

அந்த படுக்கையை சிவனுக்கு ஒதுக்கியிருப்பதால் பயணிகள் முன்பதிவு செய்ய முடியாது எனவும் பேசப்பட்டு வந்தது. இந்தநிலையில், இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது. அதில், ரயில் ஊழியர்கள், ரயிலின் தொடக்க ஓட்டத்தில் பூஜை செய்வதற்காக மேல் படுக்கை ஒன்றில் ஸ்ரீ மஹாகால் புகைப்படங்களை தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இது நிகழ்ச்சி தொடக்கத்திற்காக பூஜை  செய்வதற்கு ஒரு முறை மட்டும் இருக்கும் என தெரிவித்துள்ளது. 

வர்த்தக ரீதியாக ரெயில் ஓட தொடங்கியபின்னர் இதுபோன்ற படுக்கை வசதி ஒதுக்கீடு எதுவும் இருக்காது என ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.