மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமிற்கு தடையா.? ட்ராயின் புதிய அறிவிப்பு என்ன.?
அத்தியாவசிய இணையதள சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஓடிடி தளங்கள் மற்றும் இணைய சேவைகளைதேர்ந்தெடுத்து தடை செய்யும் ஏற்பாடு இருக்க வேண்டும் என ட்ராய் கருதுவதாக எக்கனாமிக் டைம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்சப், பேஸ்புக் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் இந்த தடை செய்யக்கூடிய பட்டியலில் இருக்கலாம் என ஒரு கருத்து நிலவி வந்தது. இந்நிலையில் ட்ராய் மூத்த அதிகாரி ஒருவர் தடை செய்யப்படும் செயலிகள் பற்றியும் இணைய சேவைகளின் முக்கியத்துவம் பற்றியும் பேசி இருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் அவர் வாட்சப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை தடை செய்யும் வழிமுறைகள் எதுவும் நிர்வாகத்திடம் இல்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் மக்களின் அடிப்படை தேவைகளான வங்கி சேவை கல்வி மற்றும் சுகாதார உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் இணையதளத்தின் சேவைகளை மேம்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் கூறினார் .
மேலும் இது தொடர்பாக பேசி இருக்கும் மற்றொரு அதிகாரி இந்த அப்ளிகேஷன்களின் பயன்பாடுகளில் தவறான செய்திகள் மிக வேகமாக பரப்பப்படுகின்றன. மேலும் இவை அமைதியின்மை மற்றும் வன்முறை சூழ்நிலை உருவாவதற்கு காரணமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அப்ளிகேஷன்களை தேர்ந்தெடுத்து தடை செய்வது பற்றி ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஓடிடி நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன.ஓடிடி நிறுவனங்கள் அனைத்தும் 2000 ஆண்டின் ஐடி சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன என்றும் மேலும் இவற்றிற்கு எதிரான சட்டங்கள் புது முயற்சிகளை தடுக்கும் எனவும் தெரிவித்தன.