19 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர்.!



isro chief dharisanam in thirumala

பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஆந்திரம் மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் 19 செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று துவங்கியது. இதில் ஏவப்படும் அனைத்து செயற்கைக் கோள்களும் சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் மூலம் 19 செயற்கைக்கோள்கள் இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இதன் 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. 

ISRO

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது அவர், ராக்கெட்டின் மாதிரி வடிவம், ஆவணங்கள், வரைபடம் ஆகியவற்றை மூலவர் பாதத்தில் வைத்து வழிபட்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.