திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி என்கவுண்டர்.. ஜம்முவில் பாதுகாப்புப்படை அதிரடி.!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்தாக் மாவட்டம், சிம்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தவே, அதிகாரிகள் தரைப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் தொடங்கிய துப்பாக்கி சண்டை சிலமணிநேரம் நீடித்தது. இதில், அதிகாரிகளின் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டுள்ளான்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி நிஸார் தார் என்பவன் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளான். இந்த தகவலை பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ள நிலையில், அங்குள்ள சில பகுதிகளில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.