#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி, 12 பேர் பலி, 13 பேர் படுகாயம்.. புத்தாண்டில் சோகம்.! இழப்பீடு அறிவிப்பு.!
மாதா வைஷ்ணோ தேவி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா பகுதியில், மாதா வைஷ்ணோ தேவி கோவில் உள்ளது. நேற்று புத்தாண்டை வரவேற்கும் பொருட்டும், விழாக்காலத்தை முன்னிட்டும் மக்கள் கோவிலுக்கு திரளாக சென்று இருந்தனர்.
இந்த நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டம் வந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நள்ளிரவு 2.45 மணியில் இருந்து தற்போது வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சார்ந்த பலரும் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்த நிலையில், இந்த சோகம் நடந்துள்ளது. நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோக நிகழ்வில் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலை அறிந்த மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்போல, மாநில அரசின் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.