ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
புனித மரத்தை வெட்டியவரின் மீது கிராமமே தாக்குதல்.. துடிதுடிக்க கொலை, உடலுக்கு தீவைப்பு..! பதைபதைப்பு சம்பவம்.!!

கிராமத்தினர் புனித மரமாக நினைத்து வணங்கி வரும் மரத்தை வெட்டி விற்பனை செய்து வருமானம் பார்த்தவர் கிராமத்தினரால் அடித்தே கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிம்டேகா பகுதியை சார்ந்த ஒரு சமூக மக்கள், அங்குள்ள மரம் ஒன்றை தங்களின் புனித மரமாக நினைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த மரத்தினை கொலேபிரா பகுதியை சார்ந்த சஞ்சுபிரதான் என்பவர் வெட்டி விற்பனை செய்து வருமானம் பார்த்து வந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்த நிலையில், அவரை கிராமே சேர்ந்து கொலை செய்ய முடிவெடுத்துள்ளது. சம்பவத்தன்று சஞ்சு பிரதான் மரத்தை வெட்டிக்கொண்டு இருந்த தகவல் கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சுமார் 150 பேர் ஒன்று திரண்டு சென்று சஞ்சு பிராதனை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், கல் மற்றும் செங்கல் வீசி தாக்குதலும் நடதப்பட்டுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை தீயிட்டும் கிராமத்தினர் கொளுத்தியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், எரிந்து எஞ்சியிருந்த சஞ்சு பிரதானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.