3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
எச்.பி கேஸ் லாரி - பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் மரணம், 24 பேர் படுகாயம்.!
பேருந்தும் - சமையல் கியாஸ் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பகுர் மாவட்டம், அம்ரபரா அருகேயுள்ள படேர்கோளா கிராமம் அருகே இன்று காலை பேருந்தும் - எச்.பி கியாஸ் சிலிண்டரை ஏற்றி வந்த கனகர லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தின் முன்பக்கம் பாதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தங்களை காப்பாற்றக்கூறி அபயக்குரலிட்டுள்ளனர். விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், விரைந்து செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், பேருந்து பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், 24 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவோரில், 10 க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பலி அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும், நல்வாய்ப்பாக கியாஸ் சிலிண்டர் வெடிக்காத காரணத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Jharkhand: At least 10 people dead, over 25 injured in head-on collision between bus and truck transporting gas cylinders in #Jharkhand's #Pakur#Accidente #LPG #Traffic #Fog #Roadsafety pic.twitter.com/loWaGuOdD5
— Chaudhary Parvez (@ChaudharyParvez) January 5, 2022