மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமான நிலையத்திற்கு வந்த பார்சல்! சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
விமானம் மூலம் தங்கம், போதை பொருள் கடத்துவது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில் கனடாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பார்சல் ஒன்றை சுங்கத்துறை அதிகாரிகள் சோதித்ததில் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சென்னையை சேர்ந்த குமரகுரு என்பவருக்கு மூலிகை காபி பவுடர் என்ற பெயரில் கனடாவில் இருந்து பார்சல் ஓன்று வந்துள்ளது. வழக்கமான சோதனையில் ஈடுபட்ட அஞ்சலக சுங்க இலாகா பிரிவு அதிகாரிகளுக்கு அந்த பார்சல் மீது சந்தேகம் வந்ததை அடுத்து சோதனைக்காக அந்த பார்சலை அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து அந்த பார்சலில் அதிக உயர் ரக கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த கஞ்சாவை ஆர்டர் செய்த குமரகுரு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.