மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த யூடியூபர் கைது.!
கேரளாவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி ஸ்டாம்ப் உள்ளிட்ட சிந்தடிக் போதை பொருள் விற்பனை மிகவும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த வகை போதைப் பொருட்கள் பெங்களூரில் இருந்து கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண் யூட்யூபர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கடந்த சில மாதங்களாக போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று எர்ணாகுளம் காலடி பகுதியில் வைத்து சுவாதி கிருஷ்ணாவை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று கிராம் மற்றும் 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.