பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
கர்நாடக மாநிலத்தின் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சம்பளம் உயர்வு.!
கர்நாடக மாநிலத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாதம் 4 ஆம் தேதி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டப்பேரவை முதல்வர், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தற்போதைய நிலைமையில், கர்நாடக மாநில முதல்வரின் மாத சம்பள அளவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அமைச்சர்களின் ஊதியம் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. எம்.எல்.ஏக்களின் ஊதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
இதனைப்போல சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கான மாத ஊதியமும் உயர்த்தப்படுகிறது. மேலும், அவர்களுக்கான பயண செலவின தொகைகளை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் வாகன எரிபொருள் செலவு, வீட்டு செலவுகளுக்காக தொகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.