மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2 லாரிகள் மோதி பெரும் விபத்து.. ஓட்டுநர், கிளீனர் உட்பட 4 பேர் துடிதுடித்து மரணம்.!
டயர் பஞ்சராகி நின்ற வெங்காய லாரி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர், கிளீனர்என 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் மாவட்டம், ரோன் பகுதியில் இருந்து வெங்காய பாரமேற்றி வந்த லாரி பெங்களூர் நோக்கி பயணம் செய்தது. இந்த லாரி இன்று காலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே பெங்களூர் - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், தொட்டாசித்தனஹள்ளி அருகே வருகையில் லாரி டயர் பஞ்சர் ஆகியுள்ளது.
இதனால் லாரி ஓட்டுநர் லாரியை சாலையோரம் நிறுத்திய நிலையில், லாரியில் மாற்று டயர் இல்லாத காரணத்தால் பஞ்சரான டயரை சரி செய்ய முயற்சித்துள்ளனர். லாரிக்கு பஞ்சர் பார்க்கையில் லாரியின் ஓட்டுநர், கிளீனர் உட்பட 4 பேர் அங்கு இருந்துள்ளனர். பெலகாவியில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த லாரியும் சாலையில் வந்து கொண்டு இருந்துள்ளது.
இதன்போது, எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி - வெங்காய லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில், வெங்காய லாரியின் பின்புறமும், டேங்கர் லாரியின் முன்புறமும் பலத்த சேதம் அடைந்தது. வெங்காயம் அனைத்தும் சாலைகளில் சிதறியது. வெங்காய லாரியின் பின்புறம் நின்று கொண்டு இருந்த 4 பேரும் பலத்த காயத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சித்ரதுர்கா காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், உயிரிழந்தது ரோன் பகுதியை சார்ந்த சரணப்பா (வயது 35), குஷ்டகி பகுதியை சார்ந்த சஞ்சய் (வயது 24), மஞ்சுநாத் (வயது 26), ராய்ச்சூரை சார்ந்த ஹீலியப்பா (வயது 40) என்பது தெரியவந்தது.
இவர்களில் சரணப்பா வெங்காய லாரியின் ஓட்டுநர், சஞ்சய் கிளீனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தால் பெங்களூர் - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேர போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.