தற்கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..! மனைவி குடும்பத்தினர், காவல் உதவி ஆணையர் மீது புகார்.!



Karnataka Bangalore Kanakapura Man Suicide Case Issue

ஆயுர்வேத தொழிற்சாலை அதிகாரி தற்கொலை வழக்கில் உதவி ஆணையர், மனைவியின் குடும்பத்தினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் கனகபுரா, ககளிப்புரா அடுக்குமாடி குடியிருப்பதை சேர்ந்தவர் ஈஸ்வர்குமார் (வயது 49). இவர் அங்குள்ள ஆயுர்வேத தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஈஸ்வர் குமாருக்கும் - அவரின் மனைவி ரேஷ்மிக்கும் இடையே அவ்வப்போது குடும்ப சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த ரேஷ்மி, கணவர் ஈஸ்வர்குமாரின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஈஸ்வர் குமாரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் வீட்டிற்கு வந்த ஈஸ்வர் குமார், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக ககளிப்புரா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ஈஸ்வர்குமாரின் சகோதரர் ரேவண்ணா சித்தேஸ்வர் தம்பியின் மரணத்தில் மர்மம் உள்ளது என புகார் அளித்துள்ளார். மேலும், அவரின் மனைவி ரேஷ்மி, ரேஷ்மியின் சகோதரர் ரூபா, ரூபாவின் கணவர் பவான், ரேஷ்மியின் சகோதரர் பசவராஜ், ஜெய்நகர் காவல் உதவி ஆணையர் சீனிவாஸ் ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

karnataka

ரேஷ்மி கொடுத்த புகாரின் பேரில் எனது சகோதரரை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல் உதவி ஆணையர் சீனிவாஸ், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடக்கூறி மிரட்டி இருக்கிறார். மேலும், கையெழுத்து போடாத பட்சத்தில் வேலையை காலி செய்திடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். இதனாலேயே அவர் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலைக்கு முன்னதாக 14 பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் ரேஷ்மி, ரூபா, பவான், பசவராஜ் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், காவல்துறை உதவி ஆணையர் சீனிவாசனின் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Karn