மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாரி - ஆட்டோ நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் துடிதுடிக்க மரணம்.! கண்ணீர் சோகம்.!!
துக்க வீட்டிற்கு செல்கையில் லாரி - ஆட்டோ நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மாவட்டம், ஜகலூர் செலகோடி கிராமத்தில் வைத்து வருபவர் ஹாலப்பா (வயது 70), ருத்ரப்பா (வயது 58), பசவராஜப்பா (வயது 45). இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். நேற்று சித்ரதுர்கா மாரகட்டேவில் உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, இவர்கள் மூவர் உட்பட 9 பேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.
இவர்களின் வாகனம் மாரகட்டேவுக்கு முன்னர் சென்றபோது, எதிரே வந்த லாரியுடன் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், ஹாலப்பா, ருத்ரப்பா மற்றும் பசவராஜப்பா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடலை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக சித்ரதுர்கா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.