மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வக்கிர எண்ணத்துடன் இந்தியாவுக்கு எதிராக பதிவிட்டால் கடும் நடவடிக்கை - கர்நாடக முதல்வர் எச்சரிக்கை.!
ஜெனரல் ராவத்தின் தொடர்பாக வதந்தி பரப்பி, அவதூறாக சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் எச்சரித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இராணுவ பயிற்சிப்பள்ளிக்கு வருகை தரவிருந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர், சூலூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இராணுவ ஹெலிகாப்டரில் விமானியாக இருந்த கேப்டன் வருண் சிங் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, ஊட்டி வெலிங்ஸ்டன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
பெங்களூர் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வருண் சிங்கை நேரில் சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங்கை நேரில் சந்தித்தேன். அவர் விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன். அவருக்கு மருத்துவர்களால் உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெனரல் ராவத்தின் மரணம் தொடர்பாக சில வதந்தி பரப்புகிறார்கள்.
சிலர் வக்கிர எண்ணத்துடன் கேவலமான செயல்களை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பதிவுகளை வைத்து, சம்பந்தப்பட்ட நபர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.