குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
2 ஸ்ட்ரோக் எஞ்சின் பயன்படுத்த ஏப்ரல் 1 முதல் தடை - அரசு அதிரடி உத்தரவு.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் காற்று மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகளவு புகையை வெளியேற்றும் வாகனத்தை பயன்படுத்தும் ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரில் பிரதானமாக 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோ உபயோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதனால் காற்று மற்றும் சுற்றுசூழல் மாசு அதிகரிப்பதால், அதற்கு தடை விதிக்க கர்நாடக மாநில அரசு முடிவுத்துள்ளது.
கடந்த 2 வருடமாக கொரோனா பரவல் ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுனர்கள் வருவாய் இழந்த நிலையில், 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் பெங்களூர் நகரில் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் ஆட்டோ பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப்போல, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2 ஸ்ட்ரோக் ஆட்டோவுக்கு எப்.பி செய்ய கூடாது எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை மீறி, ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு மேல் 2 ஸ்ட்ரோக் ஆட்டோ இயக்கப்பட்டு வந்தால் ஓட்டுனருக்கு உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும், ஆட்டோ ஓட்டுனர்கள் 4 ஸ்ட்ரோக் என்ஜின்களுக்கு மாறிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஞ்சின் வாங்க உதவி செய்யும் பொருட்டு, அரசின் சார்பில் ரூ.30 ஆயிரம் மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் 10 ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.