மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் ஆசிரியையுடன் உல்லாசம்., அந்தரங்க வீடியோ காண்பித்து மாணவி பலாத்கார முயற்சி.. தலைமை ஆசிரியரை அடித்து நொறுக்கிய மாணவிகள்..!!
பள்ளி மாணவிக்கு ஆபாச வீடியோ காண்பித்து பலாத்காரம் செய்ய முயற்சித்த தலைமை ஆசிரியரை பெண்கள் புடைசூழ வெளுத்தெடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. காம இச்சை கொண்ட கேடுகெட்ட தலைமை ஆசிரியரின் சல்லாபத்தை அடித்து நொறுக்கிய மாணவிகளின் தீர செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம், கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப்பள்ளியானது செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதியும் இருக்கிறது. அங்கு 30 க்கும் அதிகமான மாணவிகள் தங்கியிருந்து பயின்று வருகிறார்கள்.
பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதமாகவே சின்மயமூர்த்தி மாணவிகளின் தங்கும் விடுதிக்கு இரவுகளில் வருவதை வழக்கமாக்கி இருக்கிறார். அப்போது, மாணவிகளை தனது அறைக்கு அவர்களை வரவழைத்து பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு, ஆசைக்கு இணங்கவும் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காத்துள்ளனர். நேற்று சின்மயமூர்த்தி விடுதிக்கு வந்து, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன மாணவி அலறியபடி அங்கிருந்து வெளியே வரவே, தகவல் அறிந்த சக மாணவிகள் ஆவேசத்திற்கு உள்ளாகி தலைமை ஆசிரியரை அடித்து நொறுக்கினர். இந்த தகவல் பொதுமக்களுக்கும் தெரியவரவே, அவர்களும் விரைந்து வந்து தர்ம அடியை தாராளமாக வழங்கி சென்றனர்.
அதனைத்தொடர்ந்து, காவல் துறையினர் தலைமை ஆசிரியர் சின்மயமூர்த்தியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சின்மயமூர்த்தி பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியைகளை காம வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து, அதே விடியோவை காண்பித்து மாணவிகளை மிரட்டியதும் உறுதியானது.
ஆசிரியையுடன் தான் உல்லாசமாக இருந்த விடியோவை காண்பித்த காமுகன், நீ எனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் மதிப்பெண்ணை தேர்வில் குறைப்பேன், டி.சி கொடுப்பேன் என மிரட்டி இருக்கிறான். இதுகுறித்து போக்ஸோவில் வழக்குப்பதிந்து அதிகாரிகள் சின்மயமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.