மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோழியுடன் எடுத்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் இளம்பெண் தற்கொலை; நண்பனும் உயிரை மாய்ததால் சோகம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டம், ஹன்சுர் பகுதியை சேர்ந்தவர் சுருதி (வயது 28). இவரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர் முரளி (வயது 20).
இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில், முரளி திருமணமான இளம்பெண் சுருதியுடன் புகைப்படம் எடுத்து வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக தெரியாய்வருகிறது.
இந்த புகைப்படம் அங்குள்ள சுற்றுவட்டாரங்களில் திடீரென வைரலாக தொடங்கி இருக்கிறது. இதனால் இரண்டு குடும்பத்தார் இடையே தகராறு உருவான நிலையில், சுருதி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
சுருதியின் மரணத்தை அறிந்த முரளியும், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.