குடிபோதையில் மனநலம்பாதிக்கப்பட்டு 187 நாணயங்களை விழுந்திய போதை ஆசாமி.. வயிற்றை கிழித்து எடுத்த மருத்துவர்கள்.!



Karnataka Raichur Man Eats Coin 187 Removed After Doctors surgery

 

முழுநேர குடிகாரனாக வாழ்ந்து வந்த 60 வயது நபர் நாணயங்களை விழுங்கி வயிற்று வலியால் துடித்து, மருத்துவர்களால் புத்துயிர் பெற்ற சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டம், மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் திம்மப்பா ஹரிஜன் (வயது 60). இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள் இருக்கின்றனர். மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்த திம்மப்பா, எப்போதும் போதையிலேயே இருந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இந்நிலையில், கடந்த சில மாதமாகவே அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிடவே, அவ்வப்போது யாருக்கும் தெரியாமல் நாணயங்களை எடுத்து அவர் விழுங்கி வந்துள்ளார். இதனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திம்மப்பா நாணயங்களை விழுங்குவது குடும்பத்தினருக்கும் தெரியவில்லை.

karnataka

ராய்ச்சூர் அரசு மருத்துவமனையில் திம்மப்பா அனுமதி செய்யப்படும்போது, எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில் வயிற்றில் நாணயங்கள் இருந்தது அம்பலமானது. இதனையடுத்து, அவர் குடுமப்த்தினரால் பாகல்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக 187 நாணயங்களை திம்மப்பாவின் வயிற்றில் இருந்து அகற்றினர். அவை சுமார் 1 கிலோ எடை கொண்டு இருந்துள்ளது. மொத்தமாக திம்மப்பாவின் வயிற்றில் இருந்து ரூ.5 நாணயங்கள் 56, ரூ.2 நாணயங்கள் 51, ரூ.1 நாணயங்கள் 80 அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்னர் திம்மப்பா நலமுடன் இருக்கிறார்.