ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி மர்ம மரணம்.. கேரளாவில் மீண்டும் பேரதிர்ச்சி சம்பவம்.!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம், தென்னிப்பாலத்தை சேர்ந்த பெண்மணி, தனது 18 வயது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் தென்னிப்பாலத்தில் வசிப்பதற்கு முன்னதாக, கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
கோழிக்கோடு பகுதியில் பெண்மணி மகள், மகனுடன் வசித்து வருகையில், அப்பகுதியை சார்ந்த சிலர் பெண்ணின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தபின்னர், அங்கிருந்து தென்னிப்பாலம் வந்துள்ளார்.
அங்கும் சிறுமிக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுக்கவே, இதுகுறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில், தனது மகளுக்கு உறவினர் உட்பட 6 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இளம்பெண்ணின் தாயார் வெளியே சென்றிருந்த நிலையில், மாலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீடு உட்புறமாக பூட்டப்பட்டு இருக்க, நீண்ட நேரம் கதவை தட்டியும் மகள் திறக்காததால், சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்.
அப்போது, இளம்பெண்ணின் மகள் மயங்கி இருந்த நிலையில், அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துவிடவே, தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.