மாநில அளவில் திடீர் ஸ்ட்ரைக்.. தனியார் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பரிதவிப்பு.!



Kerala State Private Bus Corporation Strike

கேரள மாநிலத்தில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், இன்று முதலாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக கேரள தனியார் பேருந்து சங்க தலைவர் லாரன்ஸ் பாபு தெரிவிக்கையில், 

"கேரள மாநிலத்தில் தனியார் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை சரி செய்யும் வகையில் மாணவர்களுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்துவது, டீசல் மானியம் வழங்குவது, சாலை வரி தளர்த்துவது உட்பட பல கோரிக்கைகள் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

KERALA

இந்த விஷயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என மாநில அரசு கடந்த நவ. 9 ஆம் தேதி உறுதி அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இன்று முதலாக மாநிலம் முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகிறது. அரசு எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை போராட்டம் நடக்கும்" என்று தெரிவித்தார். 

கேரள மாநிலத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு போராட்டம் நடப்பதால், அம்மாநில பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.