திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தெருநாய்கடியால் ரேபிஸ் தொற்று பரவும் அபாயம்; கேரளாவில் அதிர்ச்சி.. பெற்றோர்கள் பீதி.!
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், திருச்சூர், கொல்லம், கோட்டயம் மாவட்டத்தில் தெருநாய்கள் தொல்லை என்பது அதிகளவு இருந்துள்ளது.
இதனால் நாளொன்றுக்கு பலரும் தெருநாயால் கடிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 25 ஆயிரம் பேர் தெருநாய்களால் கடிக்கப்படுகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் மொத்தமாக 1,67,437 பேர் தெருநாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் உறுதியாகியுள்ள நிலையில், திருநந்தபுரத்தில் குழந்தைகளை கடித்த நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனால் அவர்கள் ரேபிஸ் மருந்தை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களின் அறியா பிள்ளைகளை எண்ணி அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளே தெருநாய்கடியில் சிக்கி இருக்கின்றனர். '