ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்ட லித்தியம் தாதுக்கள்.... இந்தியாவின் வருங்காலம் பொலிவடையும் ஆனந்த் மகேந்திரா..



Lithium ores discovered in Jammu and Kashmir....India's future is bright Anand Mahendra..

காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் தாதுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா நாட்டின் வருங்காலம் பொலிவடையும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் சலால்-ஹைமனா பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், 59 லட்சம் டன் லித்தியம் தாது பொருட்கள் இருப்பு உள்ளது தெரிய வந்துள்ளது. 

லித்தியம் கண்டறியப்பட்ட தகவலை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்த உலோகம் மின் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. உலகில் 50 சதவீதத்திற்கு கூடுதலான லித்தியம் ஆஸ்திரேலியாவிடம் இருந்து கிடைக்கிறது.  

மொத்தம் கிடைக்க கூடிய லித்தியத்தில் 18 சதவீதம் மட்டுமே பயன்பாட்டுக்கு உரியவையாக இருக்கின்றன. உலகில் மிகப்பெரிய அளவில் லித்தியம் இரும்பு பொலிவியா நாட்டின் சலார் டே உயுனி பகுதியில் அமைந்துள்ளது. எனினும், அரசு விதிகளின்படி சுரங்கம் தோண்டுதல் அந்த நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழலில், இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரில் லித்தியம் அதிக அளவில் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவின் வருங்காலம் பொலிவடையும் என்று தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.