மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிகார கணவனின் போதை வெறியால், மனைவி இருவர் கும்பலால் பலாத்காரம்.! இரயில் நிலையத்திலேயே நடந்த கொடுமை.!
இரயில் நிலையத்தில் இளம்பெண் இருவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசோக் நகர் மாவட்டம், முங்கையொலி இரயில் நிலையத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
30 வயதுடைய பெண்மணி தனது கணவருக்காக இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, காவல் அதிகாரிகள் என அறிமுகமான இருவரால் பெண்மணி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருந்து தம்பதி பயணம் செய்த நிலையில், அவரின் கணவர் மதுபானம் வாங்க அசோக் நகர் இரயில் நிலையத்தில் இறங்கி இருக்கிறார்.
இதனால் இரயிலில் பயணித்த பெண்மணி அடுத்த இரயில் நிலையமான முங்கையொலியில் இறங்கி கணவரின் வருகைக்காக காத்திருந்துள்ளார். கணவர் மற்றொரு இரயில் மூலமாக முங்கையொலி வந்திருக்கிறார்.
அங்கு தம்பதி விவாதம் செய்துகொண்டு இருந்தபோது, தங்களை காவலர்களாக அறிமுகம் செய்த இருவர் 30 வயது பெண்ணை தனியே அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பெண்மணியின் கணவர் அடையாள அட்டை குறித்து இருவரிடமும் கேட்டபோது, காவலர்கள் என்று சாதாரண சீருடையில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். மேலும், எங்களிடமே அடையாள அட்டை கேட்கிறாயா? என பெண்ணின் கணவரை மர்ம கும்பல் தாக்கவும் செய்துள்ளது.
இறுதியில் கயவர்கள் இருவரும் பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதி, காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.