மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேயப்பா.. பாருக்குள் பாதாள அறை.. திரைப்பட பாணியில் மீட்கப்பட்ட 17 பெண்கள்.! வீடியோ வைரல்..!!
பாரின் பாதாள அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்கள் பத்திரமாக காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதுபான விடுதியில், பெண்கள் கவர்ச்சி நடனமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பெண்களை வைத்து நடனமாடும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் அந்தேரி பகுதியில் சனிக்கிழமை இரவு காவல்துறையினர் நடத்திய சோதனையில், பெண்களின் இருப்பிடம் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மறுநாள் காலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு மீண்டும் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியை உடைத்த போது, பாதாள அறை ஒன்றும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பெண்களை மீட்ட அதிகாரிகள், மேலாளர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.