மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேன்சர் வந்ததால் 12 வயது மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை; மகனின் எதிர்காலத்தை எண்ணி வீபரீதம்.!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாதாரா மாவட்டம், ஹிவார்னே கிராமத்தை சேர்ந்த 12 வயது மகனை தந்தை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. இதற்கான காரணமும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிவார்னே கிராமத்தை சேர்ந்த விஜய் கட்டல் என்பவரின் 12 வயது மகனுக்கு, கேன்சர் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மகனின் நிலையை எண்ணி தந்தை வருந்தி இருக்கிறார்.
மேலும், நோயினால் எதிர்காலத்தில் சிறுவன் கடுமையாக பாதிக்கப்படுவார் என்று எண்ணிய தந்தை, சிறுவனின் கழுத்தை கயிறு கொண்டு நெரித்து கொலை செய்துள்ளார்.
பின், சிறுவனின் உடலை அங்குள்ள ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் வீசிவிட்டு வந்துள்ளார். வழக்கில் இருந்து தப்பிக்க காவல் நிலையத்தில் மகன் மாயமானதாக புகாரும் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்து கொன்றது தெரியவந்தது. பல கோணத்தில் விசாரணை நடத்தியும் முன்னேற்றம் இல்லை.
இறுதியாக சிறுவனின் தந்தையிடம் நடத்திய விசாரணையில், உண்மை அம்பலமாகியுள்ளது.