திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடியோ: மிரண்ட யானை .!! அரண்ட மக்கள்.!! பரிதாபமாக பலியான பாகன்.!! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்.!!
கேரள மாநிலம் வைக்கம் பகுதியிலுள்ள கோவில் திருவிழாவின் போது யானை தாக்கியதில் துணை பாகன் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் வைக்கம் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது சாமி ஊர்வலம் செல்வதற்காக யானையை வரவழைத்திருந்தனர். குன்னிலட்சுமி என்ற அந்த யானையை பாகன்கள் அலங்காரம் செய்து சாமி ஊர்வலத்திற்காக தயார் செய்தனர். யானையின் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.
சாமி சிலை அலங்காரம் முடித்து ஊர்வலத்திற்கு தயாரானது. சாமி சிலை ஊர்வலம் செல்வதற்காக யானையின் தலையில் வைக்கப்பட்டது. அப்போது யானையின் துணை பாகனான சாமிச்சன் என்பவர் யானையின் கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை கழற்ற முயன்றார். அப்போது திடீரென மிரண்ட யானை துணை பாகனை கீழே தள்ளி அவர் மீது ஏறி மிதித்தது.
Mahout trampled to death by elephant during temple ritual in Keralahttps://t.co/Y2tOgVkLxS pic.twitter.com/NiwYl9ofLs
— JΛYΣƧΉ (@baldwhiner) April 4, 2024
இதனை சற்றும் எதிர்பாராத யானை பாகன் யானையை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த சாமிச்சனை ஒரு வழியாக யானையிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.