சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
டேய் விடுங்கடா.. பட்டப்பகலில் நடுரோட்டில் பரிதாபமாக தாக்கப்பட்ட நபர்.! பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

குண்டூர் மாவட்டம் பிடுகுராலாவை சேர்ந்தவர் சையான். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று விட்டு நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பியுள்ளார். அப்போது தீடீரென 4 பேர் கொண்ட கும்பல் சையானை நடுரோட்டில் வழிமறித்து கடுமையாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
அந்நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் போலீசார் நால்வரையும் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த சையான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சையான் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர் எனவும் அவரை தாக்கிய 4 பேரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு உண்டான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.