திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாய்க்கு பயந்து ஓடி ஒளிந்தவருக்கு, துடிக்கதுடிக்க அரங்கேறிய பெருங்கொடுமை!! வெளியான பகீர் சம்பவம்!!
உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி நகர் தேவா பகுதியில் திண்டோலி தவ்கி மதி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜித் குமார்.இவர் ரகுபுரா கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த தெருநாய்கள் சில அவரை பார்த்து பயங்கரமாக குரைத்து துரத்தியுள்ளது. இதனால் மிகவும் பயந்து போன அவர், அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று ஒளிந்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை திருடன் என நினைத்து, கூச்சலிட்டுள்ளனர். இதனை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நான் திருடன் இல்லை என எவ்வளவோ கூறியும் அதனை நம்பாமல் சுஜித் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து சிலர் போலீசுரனுக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்திருந்த சுஜித்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு 5 பேரை கைது செய்துள்ளனர்.