மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவி, குழந்தைகள் கொடூர கொலை; கணவர் தூக்கிட்டு தற்கொலை - கதவை திறந்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
தனது மனைவி, குசந்தைகளை கொலை செய்த கணவர், இறுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, அவுந் பகுதியை சேர்ந்தவர் சுதிப்தோ கங்குலி (வயது 44). இவர் சாப்ட்வேர் எஞ்சினியர் ஆவார். இவரது மனைவி பிரியங்கா. தம்பதிகளுக்கு 8 வயதுடைய மகன் இருக்கிறார்.
கங்குலியின் தம்பி பெங்களூரில் வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று அண்ணன் மற்றும் அன்னிக்கு பலமுறை போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை.
இதனால் புனேவில் அவரின் நண்பருக்கு போனில் தொடர்பு கொண்டு, தனது அண்ணன் வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார். அவர் சென்றபோது வீடு பூட்டி இருந்தது.
பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு பிரியங்கா மற்றும் அவரின் மகன் தலையில் பிளாஸ்டிக் பை மூடியவாறு சடலமாக கிடந்தனர்.
கங்குலி தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனால் கங்குலி தனது மனைவி, குழந்தை இறந்ததும் தான் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறுகின்றனர். மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது.