மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை கேட்ட கள்ளக்காதலியை எமலோகத்திற்கு அனுப்பிய கள்ளக்காதலன்; அது வேணுமாம், அவுங்க வேண்டாமாம்..!
உன் குழந்தையை போல இருக்கும் குழந்தை எனக்கு வேண்டும் என்று கேட்ட கள்ளக்காதலியை, 9 ஆண்டுகள் பழக்கம் என்பதையும், அவருக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதையும் நினைத்து பார்க்காமல் செய்த செயலால் சோகம் மிஞ்சியது.
கேரளா மாநிலத்தில் உள்ள உடுமப்பாரா கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி தேவிகா (வயது 34). இவர் அழகுக்கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கின்றனர்.
அங்குள்ள பவிக்கா பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர்கள் இருவரிடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. சதீஷுக்கும் திருமணம் முடிந்து குழந்தை, மனைவி இருக்கின்றனர்.
கள்ளகாதலர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதற்கிடையில், சதீஷின் குழந்தையை தேவிகா நேரில் சந்தித்து இருக்கிறார். அவரை போன்று குழந்தை வேண்டும் என்றும் விருப்பியுள்ளார்.
இதனால் சதீஷின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய தேவிகா, அதனை காதலனிடம் தெரிவித்து குழந்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எனக்கு குழந்தை கொடுக்காத பட்சத்தில், உன் குழந்தையை கொடு என்றும் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், சம்பவத்தன்று விடுதியில் சந்தித்து பேசிய இருவருக்கும் இடையே இது தொடர்பான தகராறு எழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த சதீஷ், தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அவரின் மீது வழக்குப்பதிந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.