பீகாரில் பயங்கரம்... கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கொலை.!! வைரல் புகைப்படம்.!!
பீகார் மாநிலத்தில் டிராக்டரை திருட வந்த நபர் கட்டி வைத்து உதைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
டிராக்டரை திருட வந்த கும்பல்
பீகார் மாநிலத்தின் யோகியா கிராமத்தைச் சேர்ந்த ஷம்பு சாஹ்னி மற்றும் அவரது 3 நண்பர்கள் சேர்ந்து அப்பகுதியில் உள்ள டிராக்டர் ஒன்றை திருட முயன்றுள்ளனர். இந்நிலையில் டிராக்டரின் சத்தம் கேட்டதால் அதன் உரிமையாளர் திருட வந்த கும்பலை துரத்தியிருக்கிறார். அப்போது ஷம்பு சாஹ்னி மட்டும் டிராக்டரின் உரிமையாளரிடம் சிக்கிய நிலையில் அவரது 3 நண்பர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
கை கால்களை கட்டி அடித்தே கொலை
இதனைத் தொடர்ந்து ஷம்பு சாஹ்னியை தனது இடத்திற்கு அழைத்து வந்த டிராக்டரின் உரிமையாளர், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஷம்பு சாஹ்னியின் கை கால்களை கயிற்றால் கட்டி வைத்து அடித்தே கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!
பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அவரைக் கட்டி வைத்து அடித்து கொலை செய்தது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர் கங்கா சாஹ்னி மற்றும் அவரது மருமகன் புகார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட ஷம்பு சாஹ்னியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: நெஞ்சே பதறுதே... ஒரு தலை காதல் கொடூரம்.!! 17 வயது சிறுமி எரித்து கொலை.!! வாலிபர் வெறி செயல்.!!