மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்தநாள் விழாவில் வெடித்து சிதறிய மர்மபொருள்! காங்கிரஸ் எம்.எல்.ஏ. உட்பட பலர் படுகாயம்
பெங்களூரு சாந்தி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹாரிஸ். நேற்று இரவு சாந்தி நகர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாரிசுக்கு, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மர்ம பொருள் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் எம்.எல்.ஏ. உட்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெங்களூரு காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வெடிபொருளின் சிதறல்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு சிக்கிய சம்பவத்தை அடுத்து பெங்களூரில் தற்போது மர்ம பொருள் வெடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அணைத்து பகுதிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.