வாக்கிங் சென்ற அமைச்சரின் செல்போனையே பறித்து சென்ற மர்மநபர்கள்! பின் நேர்ந்தது என்ன தெரியுமா?



mobile phone stole from minister while walking

நாளுக்கு நாள் நகைப்பறிப்பு. செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒயிட் டவுன் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வந்து செல்லும்நிலையில் அங்கு வழிப்பறி  தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் சுற்றுலாப்பயணிகள் இதுகுறித்து தொடர் வழக்குகள் பதிவிடாத நிலையில், போதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அதாவது, புதுசேரி  வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். இந்நிலையில் சமீபத்தில் புதுசேரிக்கு வருகை தந்திருந்த அவர் பொதுப்பணித்துறை பங்களாவில் தங்கியிருந்தார்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் இரவு கடற்கரை சாலையில்  நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார்.

puducheri

இந்நிலையில் அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென அமைச்சர் கமலக் கண்ணன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர். இதனை தொடர்ந்து இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 3 தனிப்படைகளை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் அணைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் வில்லியனூர் பகுதியில் ஆன் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து விசாரணை செய்ததில், 20 ஆயிரம் மதிப்புமிக்க அமைச்சரின் செல்போனை மர்மநபர்கள்  மளிகைக் கடையில் 3,500 ரூபாய்க்கு விற்றுள்ளனர். பின்னர் அப்பகுதியிலுள்ள சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் செந்தில் மற்றும் பாலா என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.