மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவை தடுக்க மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை!
கொரோனா தொடர்பாக மாநில முதல்வர்களுடன் 4ஆவது முறையாக வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
பிரதமர் மோடி, அணைத்து மாநில முதலமைச்சர்களுடன் 27-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி, நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் முதற்கட்டமாக 21 நாள் ஊரடங்கை அமல்படுத்தினார். ஆனாலும் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு முடிந்தநிலையில், கொரோனா பரவல் குறையாமல் இருந்த நிலையில், இந்த ஊரடங்கை மே மாதம் 3-ந்தேதிவரை மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக பிரதமர் அறிவித்தார்.
ஆனாலும் இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 20,400-ஐ கடந்து சென்று கொண்டிருக் கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 27-ஆம் தேதி காலை மாநில முதல் அமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பது தொடர்பாக முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி, கருத்துகளை கேட்டு அறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.