மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருகிட்ட.. கிண்டல் செய்த சிறுவனுக்கு நொடிப்பொழுதில் குரங்கு கொடுத்த பலே தண்டனை.! வைரல் வீடியோ!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது விலங்குகள் மற்றும் பறவைகள் போன்ற உயிரினங்கள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகும். அவற்றில் சில ஆச்சரியமூட்டும் வகையிலும், சில பார்ப்போரை அச்சுறுத்தும் வகையிலும், மேலும் சில வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் வேடிக்கையாகவும் இருக்கும்.
அந்த வகையில் தற்போது குரங்கு ஒன்று தன்னை கிண்டல் செய்த சிறுவனை ஓங்கி உதைத்து தண்டனை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே குரங்குகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவை செய்யும் சேட்டைகள் தான். வீடியோவில் கட்டை ஒன்றின் மீது குரங்கு அமர்ந்துள்ளது.
இந்த நிலையில் சிறுவன் ஒருவன் குரங்கை கண்டு சேட்டைகள் செய்து அதனை கிண்டல் செய்துள்ளார். அதனை கண்டு டென்ஷனான குரங்கு அவனைக் கண்டு கோபமாக உருமியுள்ளது. ஆனால் சிறுவன் தொடர்ந்து அதனை கிண்டல் செய்யவே அது வேகமாக சுற்றிவந்து அந்த சிறுவனுக்கு ஒரு உதை விட்டுள்ளது. அந்த வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனசுல பெரிய மைக் டைசன்னு நினைப்பா...
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) October 15, 2022
யாருக்கிட்ட...🤪🤪🤪 pic.twitter.com/lKTdjTgp7L