திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கலிகாலம்டா.! மனுஷங்களையே மிஞ்சி மாஸாக தம் அடிக்கும் குரங்கு.! வைரலாகும் வீடியோ.! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!!
சமூக வலைதளங்களில் அண்மைக்காலமாக மனிதர்களின் வியப்பூட்டும் செயல்கள், அலப்பறைகள் மட்டுமின்றி விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களின் அசாத்திய திறமைகள், வேடிக்கையான சேட்டைகள் குறித்த வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில நமக்கு வியப்பூட்டும் வகையிலும், சில வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.
மேலும் பல வீடியோக்களில் விலங்குகளின் வேடிக்கையான செயல்கள் மனிதர்களே மிஞ்சும் அளவிற்கு ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கும். அவ்வாறு தற்போது சமூக வலைதளத்தில் குரங்கு ஒன்று ஸ்டைலாக புகைப்பிடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் குரங்கு ஒன்று சிகரெட் துண்டினை தனது கைகளில் வைத்துக்கொண்டு, மனிதர்களையே மிஞ்சுமளவிற்கு மிகவும் அசால்டாக, ஸ்டைலாக புகைப்பிடித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. மேலும் சிலர் இதனை கண்டு கலிகாலம் ஆகிவிட்டது என வியந்து போயுள்ளனர்.