மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடுதியில் நிர்வாணமாக தொங்கிய பெண்ணின் சடலம்; 33 வயது காவலாளியால் 19 வயது பெண்ணுக்கு நடந்த பயங்கரம்.!
19 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற விடுதி காவலாளி, தானும் இரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மரைன் டிரைவ் பகுதியில் அரசுக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. விடுதியில் தங்கியிருந்து 19 வயது பெண் கல்லூரி மாணவியாக பகுதி நேரம் வேலை பார்த்து படித்து வருகிறார்.
அங்கு காவலாளியாக பிரகாஷ் என்பவர் பணியாற்றி வரும் நிலையில், சம்பவத்தன்று 4வது மாடியில் உள்ள தனது அறையில் கல்லூரி மாணவி நிர்வாணமாக தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்து உடல் தூக்கில் தொங்கவிடப்பட்டது தெரியவந்தது.
விசாரணை தொடங்கியபோதே காவலாளி பிரகாஷ் தலைமறைவானதால், அவரை அதிகாரிகள் தேடி வந்தனர். ஆனால், அவர் மரைன் டிரைவ் பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்தில், இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் சடலம் மீட்டெடுக்கப்ட்டது.
காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் எதிரொலியாக, கல்லூரி மாணவி பிரகாஷால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.