திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விளையாட சென்ற 3 வயது சிறுமிக்கு பயங்கரம்.. தெருநாய்களால் நடந்த கொடூரம்.. பறிபோன உயிர்.!
தெருநாய்கள் கடிதத்தில் 3 வயது பச்சிளம் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள மோதி நகர் பகுதியை சார்ந்த 3 வயது பச்சிளம் சிறுமி லட்சுமி. இவர், கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி மதியம் 2.15 மணியளவில் தனது சகோதர - சகோதரிகள் மற்றும் நபர்களுடன், வீட்டிற்கு அருகே உள்ள பூங்காவிற்கு விளையாட சென்றுள்ளார்.
பூங்காவில் சிறுமி லட்சுமி விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு திடீரென கூட்டமாக வந்த நாய்கள் லட்சுமியை கடித்து குதறியுள்ளது. இதனால் படுகாயமடைந்த சிறுமி அலறி துடிக்கவே, பொதுமக்கள் நாயை விரட்டியடித்துள்ளனர்.
சிறுமியை மீட்ட பொதுமக்கள் அவசர ஊர்தி உதவியுடன் ஏ.பி.ஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பச்சிளம் குழந்தைகள் வெளியே நண்பர்களுடன் விளையாட சென்றால், பெற்றோரில் யாரேனும் ஒருவர் அவர்களுடன் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.