பெட்ரோல், டீசலை ஒழிப்பேன்.. நிதின் கட்காரி சூளுரை.. சாத்தியம் தான் என  உறுதி.!



Nitin gadkari about stoping import petrol diesel 

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தி இயங்குகின்ற கார்களை முற்றிலுமாக ஒழிப்பது 100% சதவீதம் சாத்தியம்தான். இது கொஞ்சம் கடினமான விஷயம் ஆனால், சாத்தியமில்லாமல் போகாது என்பது எனது கருத்து. இந்தியாவில் 16 லட்சம் கோடி ரூபாய் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது.  இந்த பணத்தை மிச்சப்படுத்தி விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தலாம். இதனால் கிராமங்கள் செழிப்பாக இருப்பதுடன் நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். பயோ எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதால் எரிபொருள் இறக்குமதியை நாம் முற்றிலுமாக தவிர்க்க முடியும்.

Nitin Gadkari

ஃப்ளெக்ஸ் என்ஜின்களுக்கு 12 சதவீதமாகவும், கலப்பின வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை ஐந்து சதவீதமாகவும், குறைக்கும் திட்டம் நிதி அமைச்சகத்துக் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மாற்று எரிபொருளுக்கான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து வருகின்ற ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்த நிலைமையானது மாறும் என்று நம்புகிறேன். இந்த மாற்றத்திற்கான தேதியை என்னால் துல்லியமாக கூற முடியாது. மாற்றம் கடினமானது தான் ஆனால் இது சாத்தியமற்றது இல்லை. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பயோ எரிபொருளுக்கான காலத்தை கணக்கிட்டு கூறுகிறேன். ஹீரோ, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் போன்ற ஆட்டோ நிறுவனங்களும் பிளக்ஸ் இன்ஜின்களை பயன்படுத்தி வாகனங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. 

Nitin Gadkari

என்னுடைய கார் ஹைட்ரஜனில் இயங்குகின்ற கார். இப்போதெல்லாம் நாடு முழுவதும் பலர் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆரம்பத்தில் இதை குறை சொன்னவர்கள் இப்போது தங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு இந்த திட்டங்களை நம்ப ஆரம்பித்துள்ளனர்.  அசோக் லேலண்ட் மற்றும் டாடா நிறுவனங்கள் ஹைட்ரஜனில் இயங்கும் ட்ரக்குகளை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி-யில் இயங்குகின்ற லாரிகளும் இருக்கின்றன. நமது நாட்டில் புரட்சிக்கான மாற்றம் துவங்க ஆரம்பித்து விட்டது. எரிபொருள் இறக்குமதிக்கு விலக்கு அளிக்கும் பட்சத்தில் நமது நாடு சுயசார்பு நிலைக்கு முன்னேறும்." என்று தெரிவித்துள்ளார்.