மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதை குழந்தைகள் சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்.. பிரபல நடிகையின் தோசையில் இருந்ததை பார்த்தீர்களா! பெரும் ஷாக்!!
கேரளாவில் டிவி நடிகை சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி இருந்ததை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா கொச்சி காக்கநாடு பகுதியில் வசித்து வருபவர் சூரிய தாரா. இவர் ஏராளமான மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு சூட்டிங் முடிந்து வீட்டிற்கு வரும்போது எரூர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தோசை மாவு வாங்கி வந்துள்ளார்.
அதனை அவரது தாயார் தோசையாக ஊற்றி குடும்பத்தினர்கள் அனைவருக்கும் கொடுத்துள்ளார். அப்பொழுது நடிகை சூரிய தாரா சாப்பிட்ட தோசையில் தங்க மூக்குத்தி ஒன்று கிடந்துள்ளது. இதனைக் கண்டு அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், இந்த தோசையை குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் பெரும் உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டிருக்கும். தோசை மாவை செய்யும் போது எதிர்பாராத விதமாக இந்த தங்க மூக்குத்தி மாவில் விழுந்து இருக்கலாம் என கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.