கொரோனா எதிரொலி: பல வருடங்களுக்கு பிறகு தூய்மையான கங்கை, யமுனா நதிகள்.!



Now ganga, yamuna rivers purely cleaned because of urananku

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் இவ்வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களிடம் இந்நோய் பற்றிய பல்வேறு விழிப்புணர்வுகளையும் அரசு ஏற்ப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

Ganga

இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு நகரங்களில் மாசு குறைந்து தூய்மையாக காணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் புகழ் பெற்ற நதிகளான கங்கை, யமுனை ஆறுகளின் தரம் பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தூய்மையாகியுள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், மனிதர்களால் நடத்தப்படும் சடங்குகள் குறைந்ததாலும் நீரின் தரம் உயர்ந்து குடிப்பதற்கு ஏற்ப மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.