தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
வயலில் இறங்கி விவசாயத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ! துணை ஜனாதிபதி, முதலமைச்சர் பாராட்டு!
ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நபராங்காபூர் மாவட்டம், தபுகாவூன் தொகுதியின் பிஜூ ஜனதாதள எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், மனோகர் ரந்தாரி. சமீபத்தில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து மாநிலத்தில் விவசாய பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், எம்.எல்.ஏ., மனோகர் ரந்தாரி, தனக்கு சொந்தமான நிலத்தில், கடந்த சில நாட்களாக தானே உழவு செய்து வருகிறார்.
இவர் தினமும் காலை 5 மணிக்கு வயலுக்கு வந்து, வயலில் உழவு பணிகளை செய்து பின்னர் மதியம் 12 மணி வரை உழவு வேலை செய்து விட்டு வீடு திரும்புகிறார். நிலத்தில் தானே உழவு செய்யும் எம்.எல்.ஏ., ரந்தாரியை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து தபுகாவூன் தொகுதி எம்.எல்.ஏ, மனோகர் ரந்தாரி கூறுகையில், சிறு வயதிலிருந்தே நான் விவசாய வேலைகளை செய்து வருகிறேன். நான் எம்.எல்.ஏ., ஆவதற்கு முன்பே, எனது நிலத்தில் தானே உழுது வந்தேன். எனக்கு தொழில் விவசாயம் தான். விவசாயம் வளர்ச்சியடைந்தால் தான் நாட்டில் பட்டினி குறையும். விவசாயத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என கூறினார்.