மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
50 லட்சம் சொத்து மற்றும் நகைகளை ராகுல் காந்திக்கு எழுதி வைத்த பாட்டி..! என்ன காரணம்? யார் அவர்.?
78 வயதான பாட்டி தனது லட்சக்கணக்கான சொத்துக்களை ராகுல் காந்தி பெயரில் எழுதி வைத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் 78 வயது பாட்டி புஷ்பா முஞ்சால். இவர் தனது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும் ராகுல் காந்தி பெயருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். கூடவே 10 பவுன் தங்க நகையையும் அவர் ராகுல் காந்திக்கு எழுதி வைத்துள்ளார்.
இதுதொடர்பான ஆவணங்களை அவர் டேராடூனில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு நேரில் வந்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரீத்தம் சிங்கிடம் நேரிலேயே கொடுத்துள்ளார். மூதாட்டி புஷ்பாவுக்கு ராகுல் காந்தி என்றால் மிகவும் பிடிக்குமாம். அவர் மாதிரியான தலைவர்கள்தான் நாட்டுக்குத் தேவை என்பது பாட்டியின் விருப்பமாக உள்ளது.
பாட்டி ராகுல் காந்தி பெயரில் எழுதி வைத்த சொத்துக்கள் எல்லாம் இவரே சுயமாக சம்பாதித்து சேர்த்த சொத்துக்கள். இந்த சொத்துக்கள் தனக்குப் பின்னால் யாருடையே கைகளுக்குப் போய் வீணாவதை விட ராகுல் காந்திக்குப் போனால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார் புஷ்பா பாட்டி. தனது சொத்துக்கள் அனைத்தும் தனக்குப் பின்னால் ராகுல் காந்திக்குத்தான் என்று ஒரு உயில் எழுதி விட்டார்.
இந்த உயிலை டேராடூன் நீதிமன்றத்திலும் அவர் தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்தார். தற்போது மாநில காங்கிரஸ் தலைவரிடம் நேரிலும் போய் ஆவணங்களைக் கொடுத்துள்ளார். டேராடூன் புஷ்பா பாட்டி தனது சொத்துக்களை ராகுல் காந்திக்கு எழுதியிருப்பது நாடு முழுவதும் வைரலாகியுள்ளது.